ஸ்டிங்(Sting) -கின் அதி தீவிரமான விசிறி நான் ( Die Hard fan). அந்த இசைக் கலைஞனை எனக்கு பிடிக்கும்; அதைவிட அவனில் உள்ள அந்த மனிதனை மிகவும் பிடிக்கும். அவனின் பாடல்கள் மிக ஆழ்ந்த கவித்துவமும்; மிக ஆழமான அர்த்தமும் கொண்டவை. எல்லா தரப்பு மனிதர்களுக்காகுமான கலைஞன். இனம் மொழி மதம் அனைத்தயும் கடந்தக் கலைஞன். இவரது Desert Rose , Message in a bottle, Roxxane போன்ற பாடல்கள் மிகப் பிரபலம். தினமும் பத்து கிலோமீட்டர் ஓட்ட பயிற்சியும் யோகாவும் 60 வயதுக்காரனாக இருந்தாலும் இருபத்தைந்து வயதுகாரனுக்கான தோற்றத்தை தருவதை கவனிக்கலாம்.இயற் பெயர் (Gordon thomas Mathew Sumner) என்பது நியூ காஸ்ட்லே என்ற இங்கிலாந்து நாட்டில் ஒரு படகுத்துறையில் பொறியாளராக இருந்தவருக்கு மகனாக பிறந்தவர். "ஓர் ஆயிரம் ஆண்டுகள்" என்ற இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு துயரம் வந்து நெஞ்சை நிரப்பி விடும். அலாதியான அனுப்வம் அது. இந்தப் பாடலை முயற்சி செய்யுங்கள்.
A million suns, ten million years of uncertainty
I could speak a million lies, a million songs,
A million rights, a million wrongs in this balance of time
But if there was a single truth, a single light
A single thought, a singular touch of grace
Then following this single point , this single flame,
The single haunted memory of your face
I still love you
I still want you
A thousand times the mysteries unfold themselves
Like galaxies in my head"
- Sting ( One Thousand Years )
இனி மிச்சமிருக்கும் காலங்களில்
ஒரு கோடி பாதைகளில் பயணிக்கலாம்
ஒரு கோடி பயங்களுடன் சல்லாபம் செய்யலாம்
ஒரு கோடி சூரியன்களைக் காணலாம்
பல கோடி உறுதியில்லாத் தன்மையோடு வாழலாம்
ஒரு கோடி பொய்களைப் பேசலாம்
ஒரு கோடி பாடல்களைப் பாடலாம்
ஒரு கோடி சரியான விசயங்களையும்
ஒரு கோடி தவறுகளையும் புரியலாம்
ஒர் ஒற்றை உண்மைச் சொல்லோ
ஓர் ஒற்றை எண்ணமோ
ஓர் ஒற்றை ஒளிக்கீற்றோ
ஓர் ஒற்றை இரக்கமோ இருக்கும் பட்சத்தில்
அந்தப் புள்ளியிலிருந்து
அந்த எரியும் சுடரிலிருந்து
என் நினைவில் தங்கி என்னை ஆட்கொண்டிருக்கும் உன் முகச் சாயல் ஞாபகத்திலிருந்து
நான் உன்னை இப்போதும் நேசிக்கிறேன்
இப்போதும் நீ எனக்குத் தேவை
பல பால்வழித் திரள்களின் ரகசியங்களைப் போல
பல்லாயிரம் மடங்கு பூட்டி வாய்த்த ரகசியங்கள் உடைபடுகின்றன
என் ஆழ் மனதில்!
(என் தோராயமான மொழிபெயர்ப்பு)
இந்த பாடலின் தமிழ் வடிவத்தை இந்த சுட்டியை கிளிக்கிக் கேளுங்கள். மிக அழகாக காப்பி அடித்திருப்பார் "தினா". ஆபாசமான வரிகளைப் பாட மாட்டேன் என்று சொன்னதால் மார்க்கெட் இழந்ததாகச் சொல்லப்படும் உன்னி கிருஷ்ணன் இது போன்ற பாடல்களையும் தவிர்த்திருக்கலாம் தானே.
அன்பின்,
அருண்
1:20pm 15th டிசம்பர் 2012.
