Sunday, March 24, 2013

மழை பெய்த பின்னிரவு


ஒரு கோடை மழை பெய்த பின்னிரவில்
மழையை சாக்காய்  வைத்து
என்னுடன் நீயும்
உன்னுடன் நானும்
நீண்ட நேரம் கதை பேசிக்கொண்டிருந்தோம்

ஒற்றை குடையில் நீயும் நானும்
விடாத மழையில் நடக்கையில் உன்னிடமும் என்னிடமும்
வார்த்தைகளே இல்லை

மழையின் ஆழ்ந்த இரைச்சலை விட
நம்மிருவரின் மௌனம் மிக மிக சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது
ஞாபகமிருக்கிறதா !

அப்போது பிடிபடவில்லை எனக்கு
உன் மீது நான் கொண்ட காதல்
நான் தான் சொல்லவில்லை நீயாவது சொல்லி இருக்கலாம் இல்லையா!

என்னை "டம்ப்" என்றதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது
நான் பூப்பெய்த இத்தனை வருடங்கள்  பிடித்ததோ! 

அந்த மழை பெய்த பின்னிரவும்
நம் ஒற்றைக் குடை பயணமும்
சொல்லாக் காதலின் வலியும்
இன்னும் என்னை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது !