Sunday, April 7, 2013

கேங்ஸ்டெர் ஸ்குவாட் (Gangster Squad)



வருடம் 1949 லாஸ் ஏஞ்செல்ஸ். மிக்கி கோஹேன் ஒரு பாக்ஸராக வாழ்க்கையை தொடங்கி படிப் படியாக பல குற்றச்செயல்கள் செய்து வளர்ந்து  இன்று லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மிகப் பெரிய மாபியா கூட்டத் தலைவன். விபச்சாரம் மற்றும் போதை மருந்து, இவனின் பிரதானத் தொழில். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தையே தன கட்டுக்குள் வைத்திருக்கிறான்.ஜான் ஒ மரா இரண்டாம் உலகப்போரில் போரிட்டு ஓய்வு பெற்ற  முன்னாள் ராணுவ வீரன்; இப்போது மிக திறமையும் தைரியமும் நேர்மையும் நிறைந்த சார்ஜெண்ட்.ஒற்றை ஆளாக மிக்கியின் ரகசிய இடம் ஒன்றிலிருந்து மெக்ஸிகோவிலிருந்து விபச்சாரம் செய்ய கடத்திக் கொண்டு வந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்களை நம்மூர் விஜயகாந்தை போல விடுவிக்கிறான். ஜெர்ரி ஒரு மிக்க அழகும் வாய் சாதுர்யமுமுள்ள ஒரு இளம் போலீஸ் அதிகாரி. ஒரு ப்ளேபாய். அவன் நண்பன் ஜேக், மிக்கி கோஹெனின் கூடட்டதைச் ஒரு மாபியா உறுப்பினன். மிக்கியின் ஒரு இரவு விடுதியில் ஜாக்குடன் பேசிக்கொண்டிருக்கும் போது கிரேசைக் காண்கிறான். கிரேஸ் மாபியா தலைவன் மிக்கியின் காதலி. பார்த்தவுடன் அவளைப் பிடித்துப் போக அவளுடன் நட்பாகி; நெருக்கமாகி  காதலை சொல்கிறான் ஜெர்ரி. அவளுக்கும் பிடித்துப்போய் இருவரும் மிக்கிக்குத தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள்.

மிக்கியின் குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது. போலீஸ் சீப் பார்க்கர் (Nick Nolte)   ஜானை அழைத்து மிக்கியை ஒடுக்க ஒரு மறைமுகமான அன்டர்கவர் ஆபரேஷனுக்கு திட்டமிடுகிறார்கள். ஜானின் மனைவி கான்னி ஒ'மாரா முதலில் எல்லா மனைவிமார்கள் போலவே கடிந்து கொண்டாலும் பின்பு  அவளே கேங்க்ஸ்டெர் அணிக்கான போலீஸ் காரர்களை தேர்வு செய்கிறாள். முதலில் மறுத்தாலும் பின் சூ பாலிஷ் போடும் தனக்கு பிடித்தமான சிறுவன் பீட்டை கொஹன் மாபியா கும்பலுக்கும் மற்றொரு  கும்பலுக்கும் நடக்கும் சண்டையில் கொன்றதைப் பார்த்தும்; மிக்கியை ஒழித்தால் மட்டுமே தான் நிம்மதியாக கிரேசுடன் வாழ முடியும் என்பதை உணர்ந்தும் ஜெர்ரி ஐந்தாவது ஆளாக வந்து சேர்கிறான்.  கேங்கஸ்டெர் ஸ்குவாடின் கீலர் (Giovanni Ribisi) மிகத் திறமை வாய்ந்த ஒற்றன். மிக்கியின் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி பெட்டியினுள் ஒட்டுக்  கேட்பதர்க்காக ஸ்பீக்கரை பொருத்தி விட்டு  மிக்கியின் ஒவ்வொரு போதை பொருள் கள்ள நோட்டு வியாபாரத்தையும் கேங்கஸ்டெர் ஸ்குவாட் முடக்குகிறது. யார் இவர்கள் எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கையில் எதிர் அணி மாபியாகவாக இருக்கக்கூடும் என்று முதலில் நினைக்கிறார்கள். பின்னர் இவர்கள் பணம் பொருள் இவற்றைத் தொடுவதில்லை என்பதை உணர்ந்து இவர்கள் போலிசாக இருக்கக் கூடும் என மிக்கி சுதாரித்துக் கொண்டு போலியாக ஒரு ஆபரேஷனை வைத்து  கேங்கஸ்டர் ஸ்குவாடை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான். பெரிய சேதமில்லாமல் அந்த ஆபரேசனலிருந்து கேங்க்ஸ்டர் ஸ்குவாட் தப்பி விடுகிறார்கள். ஆனாலின் கீலர் ஒட்டுக் கொண்டிருக்கும்போது இடத்தைக் கண்டறிந்து அவனைக் கொன்று விடுகிறான்  மிக்கியின் மாபியாவைச் சேர்ந்தவன். மிக்கி கிரேசைக்  கொல்ல  ஜாக்கின் வீட்டுக்கு செல்ல ஜாக் கிரேசைக்  காப்பாற்ற  மிக்கியின் கைகளில் பலியாகிறான். இப்போது கிரேஸ்  தன்னால் மிக்கிக்கு எதிராக சாட்சி சொல்ல முடியும் என்று முன் வருகிறாள். அர்ரெஸ்ட் வார்ரண்டுடன் கேங்கஸ்டர் ஸ்குவாடு மிக்கியை தேடி பயணிக்கிறார்கள்.

மிக்கி என்ன ஆனான் ? கேங்கஸ்டர் ஸ்குவாட் என்ன ஆயிற்று ?. மிக்கியை கேங்கஸ்டர் ஸ்குவாடை சேர்ந்தவர்கள் கடைசியில் கைது செய்கிறார்கள். அனால் இது ஒரு மறைமுக ஆபரேஷன் என்பதால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம்; ஸ்டார்டம் கிடைக்கவில்லை. தேவையில்லை என்று அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுகிறார்கள். இப்போது கிரேஸ்  ஜெர்ரியுடன் சந்தோசமாக; ஜான் அவன் மனைவி மற்றும் குழந்தையுடன்.

 சுபம்.

மிக்கியாக ஷான் பென் (Sean Penn) சொல்லவா வேண்டும் மிரட்டி  எடுத்திருக்கிறார் மனுஷன். ஏற்கனவே "மிஸ்டிக் ரிவர்" படத்தில் செய்த சற்றேரக் குறைய அதே ரோல். ஆனால் antagonist ஜோஷ் ப்ரோளின் (Josh Brolin) ஜானாக பிரமாதாமான நடித்திருப்பார் . ரியான் கொஸ்லிங் (Ryan Gosling) ஜெர்ரி ரோலில் கனக்கச்சிதமாக பொருந்துகிறார். கிரேசாக எம்மா ஸ்டோன் (Emma Stone) மிக அழகான தேர்ந்த நடிகை. கியோவன்னி ரிபிசி (Giovanni Ribisi) கீலேராக நன்றாக செய்திருக்கிரார்கள். படம் அலுக்காமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது. மிகப் பிரமாதமான கதை இல்லை. ஆனால் சொன்ன விதம் நன்றாகவே இருந்தது.  டைரக்டர் ரூபன் பிஷெருக்கு "ஜாம்பி லாண்டு (Zombieland)" க்கு பிறகு இரண்டாவது படம்.
A decent thriller. 


My Rating 3.5/5


No comments:

Post a Comment