டெக்ஸஸ் எல்லையில் ரோந்து செல்லும் காவலர்கள் நரி தின்று கொண்டிருக்கும் அவசர கதியில் புதைக்கப்பட்ட ஒரு பிணத்தை கண்டெடுக்கின்றனர். விசாரிப்பில் இறந்தவரின் பெயர் மேல்கியதேஸ் எஸ்த்றதா என்று தெரிகிறது. எஸ்த்றதாவின் சடலத்தை அலுவலகத்தில் அவனது ஒரே நண்பரான வயதான கௌபாயான பீட் ஷரீப்பின் அலுவலகத்தில் வந்து பார்க்கிறார். பின்னர் கௌபாய்யின் சிந்தனை காட்சிகள் பின்னோக்கி விரிகிறது. அதில் மேல்கியதேஸ் மெக்ஸிகோவிலிருந்து தான் ஒரு கௌபாய் என்றும் வேலை தேடி மெக்ஸிகோவிலிருந்து வருவதாகவும் ஒற்றைக் குதிரைக்கு தண்ணீர் வேண்டுமெனவும் பீட்டிடம் கேட்கிறான். அப்போதிருந்து மிக அருமையான நண்பர்களாய் பீட்டும் மேல்கியதேஸ் ஆகின்றனர். பின்னர் மேல்குவைதாஸ் ஒரு ஆட்டுபண்ணை வைத்து ஜீவனம் செய்ய உதவுகிறான் பீட்.
சின்சினாட்டியில்லிருந்து அமெரிக்க-மெக்ஸிகோ எல்லை ரோந்து காவலாளி பணிக்கு மனைவியுடன் வருகின்றான் மைக் நார்டன் என்பவன் . தவறுதலாக மேல்கியதேசை சுட்டது மைக் நோர்டன். மெல்குவைதேஸ் சடலத்தை குறித்து மேலும் விசாரிக்காமல் இரண்டாவது முறையாய் ஷரிப் மேற்பார்வையில் புதைக்கப்படுகிறான். இதை அறிந்து பீட் ஷரிப்பை கடிந்து கொல்கிறான். மெல்குவைதேசை சுட்டது ஒரு எல்லை ரோந்துக் காவலன் காரன் என்று அறிந்து எல்லை ரோந்து காவலாளியைப் பிணைக்கைதியாக கடத்தி மெல்குவைதேசிடம் முன்னமே சத்தியம் செய்தது போல் மெக்சி கோவில் அவனின் சொந்த வூரில் அவன் சடலத்தை புதைக்க இரண்டாவது முறையாக அவனைப் புதைத்த இடத்திலிருந்து தோண்டி துணியில் சுற்றப்பட்ட மெல்குவைதெசின் பிணத்துடன் மெக்சிகோ நோக்கி பயணம் செல்கின்றான்.
டாமி லீ ஜோன்சின் இயக்கத்தில் முதல் படம் இது. பீட் கதாபாத்திரத்தில் படத்தை தன் தோளில் தாங்கி செல்கிறார். வயதான கவ்பாய் கதாபாத்திரத்தில் அடித்தொண்டை டெக்ஸஸ் உச்சரிப்பில் மிரட்டியிருப்பார். நீண்ட கிருதாவும் கவ்பாய் தொப்பியுமாக கலக்கி இருப்பார். மிகவும் பயங்கரமான ஒரு காடு மலை பாலைவனம் தாண்டிய ஒரு பயணத்தில் மெல்குவைடசின் சடலத்துடனும் கையில் விலங்கிடப்பட்ட நார்டனுடனும் . ஒரு காட்சியில் நாளாக நாளாக அழுகி சிதையும் மெல்குவைதெசின் இறந்த உடலுக்கு தலை சீவுவார்; முடி கையேடு வந்துவிடும். அப்போது சோகமே உருவாய் முகத்தை பார்த்து தலை மீது கை வைத்துக்கொண்டு
You look bad, son !.. என்பார். உன்மத்த நட்பின் மிளிரும் தருணம் அது !. பீட் உடன் சேர்ந்து நாமும் கலங்கும் தருணம் அது.
Barry Pepper மைக் நார்டன் என்ற இனவெறியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் மெக்சிக்கன் நாட்டு குடிமக்களை மூர்க்கத்தனமாய் தாக்குகிறான். பெண்ணென்றும் பார்க்காமல் ஒரு மெக்சிக்க பிரஜையை அடிக்கிறான்.அவனது மனைவியை அவள் சமைத்துக்கொண்டிருக்கும் பொது பின் புறம் சென்று புணரும் காமுகன் கதாபாத்திரம் அவனுக்கு. இது போன்ற ஆட்களை Jerk என்பார்கள் இங்கே. மொத்தத்தில் அன்பின் வாசனையே தெரியாது ஒரு மூர்க்க மிருக கதாபாத்திரம் பெப்பருடையது. இப்படிப்பட்ட பின்புலம் உள்ள ஒருவன் மேல்க்வைதஸ்-ஐ சுட்டுகொன்று அதை மறைக்க அவனை ஒன்றும் பாதியுமாய் புதைப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
மூன்று முறை புதைக்கப்படும் சடலத்துக்கு சொந்தக்காரன் என்ன மாதிரியான பாவம் புரிந்தவனாய் இருக்கக் கூடும். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற வரும் ஆயிரக்கான மக்களின் எண்ணற்ற சோகக் கதைகளில் ஒன்றுதான் மேல்குவைதசின் கதையும். டெக்ஸ்-மேக்ஸ் எல்லையில் வீசும் பாலைவன காற்று மாத்திரமே துணையாக ஆளற்ற தனிமையில் மகனை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கண் தெரியாத அந்தக் கிழவன் பீட்டை நோக்கி தன்னை சுட்டுக் கொன்று விடுமாறு வரும் காட்சி உங்களை என்னவோ செய்யும். Rattle snake கடித்து ரோந்துக் காவலனாய் இருந்தபோது முன்பொருமுறை தன்னால் கைது செய்து மேக்சிகோவுக்கே திரும்ப deport செய்யப்பட்ட பெண்ணே நோர்டோனை காப்பாற்றும் காட்சி அருமையான ஒன்று . மேஹிகோ மக்கள் அன்பானவர்கள்!
வித்தியாசமான கதை விரும்பிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

No comments:
Post a Comment