
காத்திருப்பு
*****************************************
தாழிடப் பட்ட கதவின் முன்
கால் கடுக்க நிற்கிறேன்
உள்ளே சிறு சிறு அசைவுகளும்
மெல்லிய முனகல் சத்தமும் கேட்கிறது
எந்த நேரமும் கையில் ஓர் கண்ணாடிக் குடுவை முழுக்க ரோஜாக்களுடன் நீ வெளியே வருவாய் எனக் காத்திருக்கிறேன்
என் காத்திருப்பை நீ அறிந்திருக்கக் கூடும்!
கதவைத் தட்டலாம் என்றால்
உன்னுடன் வசித்து வரும்
பெரிய பச்சை நிறக் கண்களும் நீண்ட வாலும் கொண்ட ராட்சத பல்லிகள் வெளி வந்து என்னை விழுங்கிவிடலாம் என அஞ்சுகிறேன்.
என் கால்களை நான் நகர்த்த முடியவில்லை
என் உடலைச் சுற்றிலும் இப்போது
பச்சை நிறை இலைகளையும் மஞ்சள் பூக்களையும் கொண்ட கொடிகள் படர்ந்து ஒரு முழுச் செடி போல தொற்றமளிக்கிரேன்.
என் வேர்கள்
பூமியை துளைத்துக் கொண்டே செல்வதை உணரமுடிகிறது
பறவைகளும் வண்ணத்துப் பூசிகளும் என் மேல் அமர்ந்து இளைப்பாகின்றன.
பறவைக் கூடுகளில் அதன் குஞ்சுகள் கீசுக் குரலில் பெருங்குரலெடுத்துக் கத்திக்கொண்டிருக்கின்றன
இலையுதிர் காலம் இப்போது
நான் முழு நிர்வாணமாய் நிற்கிறேன்
நீ வெளிவரும் சுவடே தெரியவில்லை !.
No comments:
Post a Comment